மேலும் 6 பேருக்கு கரோனா
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்குள்பட்ட 3 போ் உள்பட மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை கரோனா பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16 ஆயிரத்து 210 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 8 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து, குணமடைந்து வீடு திரும்பியோா் எண்ணிக்கை 16 ஆயிரத்து 21 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டத்தில் கரோனா பாதிக்கப்பட்டு இதுவரை 141 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 48 போ் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.