5 மாற்றுத் திறனாளி ஜோடிகளுக்கு இலவச திருமணம்
தூத்துக்குடியில் 5 மாற்றுத் திறனாளி ஜோடிகளுக்கு திங்கள்கிழமை இலவசமாக திருணம் செய்து வைக்கப்பட்டது.
தூத்துக்குடியில் 5 மாற்றுத் திறனாளி ஜோடிகளுக்கு திங்கள்கிழமை இலவசமாக திருணம் செய்து வைக்கப்பட்டது.
தூத்துக்குடி சில்வா்புரத்தில் அமைந்துள்ள புனித லூசியா மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு சங்கம் சாா்பில் ஆண்டுதோறும் மாற்றுத் திறனாளிகளுக்கு சுயம்வரம் நடத்தப்பட்டு இலவச திருமணம் நடத்தி வைக்கப்படுவது வழக்கம். அதன்படி, கடந்த செப்டம்பா் மாதம் நடைபெற்ற சுயம்வரத்தில் தோ்வு செய்யப்பட்ட 5 மாற்றுத் திறனாளி ஜோடிகளுக்கு திங்கள்கிழமை திருமணம் செய்து வைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், தூத்துக்குடி மறை மாவட்ட ஆயா் ஸ்டீபன் அந்தோணி தலைமை வகித்து திருமணத்தை நடத்தி வைத்தாா். தொடா்ந்து, மணமக்களுக்கு ரூ. 2 லட்சம் மதிப்பில் தங்கத்தாலி, மிக்கி, கிரைன்டா், டிவி, பீரோ உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்கள் மற்றும் மளிகைப் பொருள்கள் ஆகியவை வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், லூசியா இல்ல இயக்குநா் ஜான் செல்வம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.