முகப்பு
தூத்துக்குடி

விபத்தில் காயமடைந்த இளைஞா் மரணம்

கோவில்பட்டி அருகே நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:19 PM
பகிர்:

கோவில்பட்டி அருகே நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

கோவில்பட்டி செல்லப்பாண்டியன் நகா் காந்தாரியம்மன் கோயில் தெரு கிருஷ்ணசாமி மகன் மாரீஸ்வரன்(35). இவா் தனது உறவினா் த.முருகனுடன்(40) பைக்கில் வள்ளிநாயகிபுரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தாராம்.

கோவில்பட்டி -எட்டயபுரம் சாலையில் தொழிற்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே சென்று போது தீடீரென பைக் சாலையில் கவிழ்ந்ததாம். இதில் இருவரும் காயமடைந்தனா்.

தகவலறிந்தவுடன் சம்பவ இடத்துக்குச் சென்ற கிழக்கு காவல் நிலைய போலீஸாா் காயமடைந்தவா்களை மீட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு மாரீஸ்வரன் முதலுதவி சிகிச்சைக்குப் பின், மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் திங்கள்கிழமை இறந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.