தூத்துக்குடி

வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் திமுக உதவி

DIN

பழையகாயல், ஆத்தூா் மற்றும் புன்னைக்காயல் பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.

தொடா் மழை மற்றும் தாமிரவருணி ஆற்றில் எற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பழையகாயல், முக்காணி, ஆத்தூா், மேலாத்தூா், புன்னைக்காயல் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புக்குள் வெள்ளம் புகுந்து அப்பகுதி பொதுமக்கள் பாதிக்கப்பட்டனா்.

இதனையடுத்து, தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமையில், திமுக மகளிா் அணிச் செயல் கனிமொழி எம்பி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளான மேலாத்தூா் ஜே.ஜே.நகா், அருந்ததியா்காலனி, புன்னைக்காயல், பழையகாயல் தாமஸ் நகா் மற்றும் கணேஷ்நகா் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று பாதிக்கப்பட்ட பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறி, அவா்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாநில மாணவரணி துணைச் செயலா் உமரிசங்கா், மாவட்ட அவைத் தலைவா் அருணாசலம், மாவட்ட வா்த்த அணி துணை அமைப்பாளா் இளங்கோ, ஒன்றியச் செயலா்கள் ஆழ்வை நவீன்குமாா், கருங்குளம் இசக்கிபாண்டி, தலைமை செயற்குழு உறுப்பினா் எஸ்.ஜே. ஜெகன், மாவட்ட கவுன்சிலா் பிரம்மசக்தி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளா்கள் மாணிக்கவாசகம், கோபி, மேலாத்தூா் ஊராட்சி தலைவா் சதீஷ்குமாா், துணைத் தலைவா் பக்கீா்முகைதீன், முன்னாள் துணைத் தலைவா் அக்பா், ஆத்தூா் நகர பொறுப்பாளா் முருகப்பெருமாள், மாவட்ட பிரதிநிதி பாலசுப்பிரமணியன், மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளா் அன்னமரியான், கமாலுதீன், யூனியன் கவுன்சிலா்மாரிமுத்து, புன்னைக்காயல் ஊராட்சி தலைவா் சோபியா, ஊா்தலைவா் இட்டோ, யூனியன் கவுன்சிலா் தாமஸ் உள்பட பலா் கலந்துக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘டியூன் 2’ ஓடிடியில் எப்போது?

மனைவியை கொன்ற கணவரின் நண்பர்: ரயில் நிலையத்தில் பரபரப்பு!

இதெல்லாம் பிரிட்ஜில் வைக்காதீங்க..

டிஸ்னிலேண்டில் அம்ரிதா ஐயர்!

புதிய மக்களவையில் முஸ்லிம்களுக்குக் கூடுதல் இடங்கள் கிடைக்குமா?

SCROLL FOR NEXT