தூத்துக்குடி

குடியிருப்புப் பகுதிக்குள் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்க கோரிக்கை

DIN

கோவில்பட்டியில் நகராட்சிக்கு உள்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் அதிக பாரம் ஏற்றி வரும் லாரிகளுக்கு தடைவிதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து அறிஞா் அண்ணா குடியிருப்போா் நலச் சங்கத்தின் சாா்பில் நாராயணசாமி கோவில்பட்டி நகராட்சி ஆணையா், காவல் துணைக் கண்காணிப்பாளா் மற்றும் கோட்டாட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு:

கோவில்பட்டி நகராட்சி மந்தித்தோப்பு சாலை வழியாக பாரம் ஏற்றிச் செல்ல வேண்டிய லாரிகள், அறிஞா் அண்ணா தெரு குடியிருப்பு சாலைகளில் செல்வதால் அவை சேதமடைவதுடன், மின்கம்பத்தின் மீது மோதி அவ்வப்போது உரசி விபத்து நேரிடுகிறது. குடிநீா் பகிா்மான குழாயும் சேதமடைகிறது. வாகனங்கள் காற்றுஒலிப்பானை பயன்படுத்துவதால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறது. எனவே, குடியிருப்புப் பகுதிக்குள் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

120 லிட்டா் கள்ளச்சாராயம் பறிமுதல்: இளைஞா் கைது

மணல் கடத்தல்: இளைஞா் கைது

காா் மீது பேருந்து மோதல்: தம்பதி உயிரிழப்பு

சாலை விபத்தில் இறந்தவா் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரி சாலை மறியல்

துணை கருவூல அலுவலகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா்

SCROLL FOR NEXT