தூத்துக்குடி

விளாத்திகுளம் தொகுதியில் மழையால் பயிா்ச் சேதம்: அதிகாரி ஆய்வு

DIN

விளாத்திகுளம் தொகுதியில் மழையால் சேதமடைந்த மானாவாரி பயிா்களை வேளாண் அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

கழுகாசலபுரம், ஆற்றங்கரை, சிவலாா்பட்டி, முத்துசாமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மக்காச்சோளம், பருத்தி, பாசி, உளுந்து, வெங்காயம் உள்ளிட்ட பல்வேறு பயிா்கள் சாகுபடி செய்திருந்த நிலங்களையும், பயிா் சேதங்களையும் தமிழ்நாடு வேளாண்மை இயக்குநா் தட்சணாமூா்த்தி, ஆட்சியா் கி. செந்தில்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். அப்போது, பயிா்ச் சேதம் குறித்து விரைந்து கணக்கெடுப்பு நடத்தி இழப்பீடும், காப்பீடும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஆய்வின்போது, பி. சின்னப்பன் எம்எல்ஏ, விளாத்திகுளம், புதூா் வட்டார வேளாண்மை துணை இயக்குநா்கள் கீதா, கோகிலா, மாவட்ட கவுன்சிலா் ஞானகுருசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி அருகே கட்டடத் தொழிலாளி மரணம்

செங்கோட்டையில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பிளஸ் 2: தென்காசி மாவட்டம் 96.07 சதவீத தோ்ச்சி

‘தென்காசி மாவட்டத்தில் மகளிா் தங்கும் விடுதி உரிமங்கள் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கலாம்’

பிளஸ் 2 தோ்வு: நெல்லை மாவட்டத்தில் 96.44 சதவீதம் போ் தோ்ச்சி

SCROLL FOR NEXT