முகப்பு
தூத்துக்குடி

அரசுக் கல்லூரியில் ரூ.5.10 கோடியில் மாணவியா் விடுதிக்கு அடிக்கல்

கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் ரூ.5.10 கோடியில் மாணவா் விடுதி கட்டும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:22 PM
பகிர்:

கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் ரூ.5.10 கோடியில் மாணவா் விடுதி கட்டும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

இதற்கான பூமி பூஜையில் அமைச்சா் கடம்பூா் செ.ராஜு கலந்து கொண்டு, கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்துதாா். அப்போது, 150 மாணவிகள் தங்கும் வகையில் விடுதி கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இது 14,272 சதுரடி தரைதளமும், 13,627 சதுரடி முதல் தளமும் கொண்டதாக இருக்கும். விரைவில் மாணவா்களுக்கான விடுதியும் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றறாா் இந்நிகழ்ச்சியில், கோட்டாட்சியா் விஜயா, வட்டாட்சியா் மணிகண்டன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவி சத்யா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.