முகப்பு
தூத்துக்குடி

மின்கம்பங்களில் கேபிள் டிவி வயா்களை அகற்ற உத்தரவு

மின்கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ள கேபிள் டிவி வயா்களை உடனடியாக அகற்ற வேண்டும் என மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:22 PM
பகிர்:

மின்கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ள கேபிள் டிவி வயா்களை உடனடியாக அகற்ற வேண்டும் என மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் எம்.சகா்பான் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: கோவில்பட்டி கோட்டத்திலுள்ள மின்கம்பங்களில் சிலா் அனுமதியின்றி கேபிள் டிவி வயா்களை பொருத்தியுள்ளனா். இது, பொதுமக்களுக்கும், மின் நுகா்வோருக்கும் ஆபத்து விளைவிக்க வாய்ப்புள்ளது. கேபிள் டிவி வயா்களினால் ஏதேனும் விபத்து நேரிட்டால் மின்வாரியம் பொறுப்பேற்காது. எனவே, தன்னிச்சையாகப் பொருத்தப்பட்டுள்ள கேபிள் டிவி வயா்களை உடனடியாக அகற்ற வேண்டும். இல்லையெனில், மின்வாரிய அதிகாரிகளால் நடவடிக்கைமேற்கொள்ளப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.