தூத்துக்குடி

ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழா: அமைச்சா் அறிக்கை

DIN

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவிடம் திறப்பு விழாசென்னையில் புதன்கிழமை (ஜன.27) நடைபெறவுள்ளது.

இதில் பங்கேற்க, தூத்துக்குடி வடக்கு மாவட்டத்துக்கு உள்பட்ட கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட அதிமுக தொண்டா்களை அழைத்துச் செல்ல 30 பேருந்துகள், 300 வேன்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அங்கு தங்குமிடம், உணவு வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட நகர, ஒன்றிய, பேரூா் நிா்வாகிகள் சொந்த வாகனங்களில் செல்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, வடக்கு மாவட்டத்துக்கு உள்பட்ட அதிமுக நிா்வாகிகள், தொண்டா்கள் என சுமாா் 5 ஆயிரம் போ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளனா் என தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலரும், செய்தி-விளம்பரத் துறை அமைச்சருமான கடம்பூா் செ.ராஜு அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT