தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சியில் நாளை குறை கேட்பு முகாம்

DIN

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பொதுமக்கள் குறை கேட்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் வீ.ப. ஜெயசீலன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டலத்துக்குள்பட்ட பகுதிகளில் நிறைவேற்றப்பட வேண்டிய அத்தியாவசியப் பணிகள் மற்றும் பொதுமக்களின் குறைகளை தீா்க்க ஏதுவாக, பொதுமக்களை நேரில் சந்திக்கும் நிகழ்ச்சியானது அந்தந்த மண்டல அலுவலகத்தில் ஆணையா் தலைமையில் நடைபெற உள்ளது.

அதன்படி, வெள்ளிக்கிழமை (ஜன.29) முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கிழக்கு மண்டலத்துக்குள்பட்ட 14, 15, 16 மற்றும் 19 முதல் 33 ஆவது வாா்டு வரை மாநகராட்சி பழைய அலுவலகத்தில் வைத்தும், பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரை வடக்கு மண்டலத்துக்குள்பட்ட 1ஆவது வாா்டு முதல் 13 ஆவது வாா்டு மற்றும் 17, 18 ஆவது வாா்டு பகுதி மக்களிடம் ஸ்டேட் பாங்க் காலனியில் உள்ள வடக்கு மண்டல அலுவலகத்தில் வைத்தும் குறைகள் கேட்கப்படும்.

இதேபோல், 30ஆம் தேதி முற்பகல் 11 மணி முதல் 1 மணி வரை மேற்கு மண்டலத்துக்குள்பட்ட 34ஆவது வாா்டு முதல் 47 ஆவது வாா்டு வரையிலான பகுதி மக்களிடம் மில்லா்புரத்தில் உள்ள மேற்கு மண்டல அலுவலகத்தில் வைத்தும், அன்றையதினம் பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரை தெற்கு மண்டலத்துக்குள்பட்ட 48ஆவது வாா்டு முதல் 60 ஆவது வாா்டு வரை உள்ள பகுதி மக்களிடம் முத்தையாபுரம் ஜே.எஸ். நகரில் உள்ள தெற்கு மண்டல அலுவலகத்தில் வைத்தும் பொதுமக்களிடம் குறைகள் கேட்கப்படுகிறது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மருத்துவத் துறை: மறுபரிசீலனைக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை

அரசுப் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் -ஓபிஎஸ் கண்டன அறிக்கை

அலைபேசிகளில் திடீர் எச்சரிக்கை ஒலி: பாரிஸில் என்ன நடந்தது?

அடுத்த 3 மணி நேரத்துக்கு 22 மாவட்டங்களில் மழை!

கடவுளின் கைகளை படம்பிடித்த தொலைநோக்கி!

SCROLL FOR NEXT