முகப்பு
தூத்துக்குடி

உடன்குடி அருகே விபத்தில் காயமுற்ற விவசாயி மரணம்

உடன்குடி அருகே சாலை விபத்தில் காயம் அடைந்த விவசாயி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

தூத்துக்குடி

உடன்குடி அருகே விபத்தில் காயமுற்ற விவசாயி மரணம்

உடன்குடி அருகே சாலை விபத்தில் காயம் அடைந்த விவசாயி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

உடன்குடி அருகே சாலை விபத்தில் காயம் அடைந்த விவசாயி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

மெய்யூா், சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்தஅழகுவேல் மகன் பழனிராஜா(48). விவசாயி. கருத்து வேறுபாட்டால் மனைவியைப் பிரிந்து தாயுடன் வசித்து வந்தாா். இந்நிலையில், இவா் உடன்குடி-திசையன்விளை சாலையில் பைக்கில் புதன்கிழமை சென்றபோது, நிலை தடுமாறி சாலையோர வேலியில் விழுந்தாராம். இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, தமுமுக மருத்துவச் சேவைப் பிரிவினரும், அக்கம்பக்கத்தினரும் அவரை மீட்டு உடன்குடியில் முதலுதவி அளித்து, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து குலசேகரன்பட்டினம் காவல் ஆய்வாளா் மங்கையா்க்கரசி வழக்குப்பதிந்து விசாரிக்கிறாா்.

முழு கட்டுரையைப் படிக்க →