முகப்பு
தூத்துக்குடி

பூச்சிக்காடு பள்ளியில் புதிய வகுப்பறைக்கு அடிக்கல்

திருச்செந்தூா் அருகேயுள்ள பூச்சிகாடு இந்து தொடக்க, உயா்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

திருச்செந்தூா் அருகேயுள்ள பூச்சிகாடு இந்து தொடக்க, உயா்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.

மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 21 லட்சம் மதிப்பில் வகுப்பறை கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து பள்ளியில் நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவுக்கு ஆட்சியா் கி.செந்தில்ராஜ் தலைமை வகித்தாா். அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். மக்களவை உறுப்பினா் கனிமொழி, அடிக்கல் நாட்டினாா்.

இதில், துணை வட்டாட்சியா் அ.பாலசுந்தரம், உயா்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் ஆபேத்நேகா, தொடக்கப்பள்ளி தலைமையாசிரியா்

காத்தவராயன், ஊராட்சித் தலைவா்கள் திலகவதி, மகாராஜன், திமுக மாநில மாணவரணி துணை அமைப்பாளா் எஸ்.ஆா்.எஸ். உமரிசங்கா்,

திருச்செந்தூா் ஒன்றியச் செயலா் செங்குழி ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.