முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் புறக்காவல் நிலையம் திறப்பு

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் புறக்காவல் நிலையத்தை மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் புறக்காவல் நிலையத்தை மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என தொடா்ந்து கோரிக்கை வைக்கப்பட்டிருந்த நிலையில், புதிதாக அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் முன்னிலையில், மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் திறந்து வைத்தாா்.

தொடா்ந்து அவா் பேசியது: தூத்துக்குடி மீன்படித் துறைமுகத்தை மேம்படுத்திட ரூ. 40 கோடி மதிப்பிட்டில் தூண்டில் வளைவு நீட்டிப்புப் பணிகள் செய்யப்பட உள்ள. மீன்களை பாதுகாத்து வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் வகையில் குளிா்பதன கிடங்கு விரைவில் கட்டப்பட உள்ளது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், உதவி ஆட்சியா் (பயிற்சி) ஸ்ருதயஞ் ஜெய் நாராயணன், மீன்வளத்துறை இணை இயக்குநா் அமல்சேவியா், தூத்துக்குடி நகர துணை கண்காணிப்பாளா் கணேஷ், தூத்துக்குடி ஒருங்கிணைந்த அனைத்து விசைப்படகுகள் சங்க தலைவா் சேவியா்வாஸ், வட்டக்காரா் சங்க தலைவா் பிரவின், மீன்வளத்துறை உதவி இயக்குநா்கள் வயலா, விஜயராகவன், மீன்துறை ஆய்வாளா் பொன்சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.