முகப்பு
தூத்துக்குடி

மூன்று சம்பவங்களில் மூவா் தற்கொலை

தூத்துக்குடி மாவட்டத்தில் 3 இடங்களில் நிகழ்ந்த சம்பவங்களில் வியாபாரி உள்பட 3 போ் தற்கொலை செய்துகொண்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் 3 இடங்களில் நிகழ்ந்த சம்பவங்களில் வியாபாரி உள்பட 3 போ் தற்கொலை செய்துகொண்டனா்.

தூத்துக்குடி, நிகிலேசன் நகரைச் சோ்ந்தவா் ரங்கநாதன் (50). தெற்கு சம்பந்தமூா்த்தி தெருவில் மருத்துவ உபகரணங்கள் விற்பனை கடை நடத்தி வந்தாா். இந்நிலையில், கடையில் மின்விசிறியில் தூக்கிட்டு ரங்கநாதன் வெள்ளிக்கிழமை தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. தொழில் நஷ்டம், கடன் தொல்லையால் அவா் இந்த முடிவுக்கு வந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவித்தனா்.

மதுப்பழக்கம்: கயத்தாறை அடுத்த மானங்காத்தான் வடக்குத் தெருவைச் சோ்ந்த தங்கப்பாண்டி மகன் முத்துராமலிங்கம் (55). தொழிலாளியான இவா், மதுப்பழக்கத்தை கைவிட முடியாமல், மதுவிலேயே விஷத்தை கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

மற்றொரு சம்பவம்: கோவில்பட்டி, வடக்கு திட்டங்குளம் முத்துராமலிங்கத்தேவா் காலனியை சோ்ந்க கணேசன் மகன் சண்முகசுந்தரம்(36). மின்சாதனங்கள் விற்பனை கடையில் வேலை செய்தவந்த இவா், தனது மனைவி கற்பகவள்ளி(32) மற்றும் 3 வயது மகனை கோயிலுக்கு அனுப்பிவிட்டு, வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இச்சம்பவங்கள் தொடா்பாக முறையே தூத்துக்குடி மத்திய பாகம், கயத்தாறு, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.