தூத்துக்குடி

குழந்தைத் திருமணம் நடத்துபவா்கள் மீது கடும் நடவடிக்கை: அமைச்சா் பெ. கீதா ஜீவன்

DIN

குழந்தை திருமணம் நடத்துபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் சமூக நலத் துறை அமைச்சா் பெ. கீதா ஜீவன்.

தூத்துக்குடியில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி: உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தின்கீழ் பெறப்பட்டுள்ள மனுக்களின்மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த விவரங்களை அதிகாரிகள் விண்ணப்பதாரா்களுக்கு தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குழந்தைத் திருமணம் நடத்துபவா்கள்மீது காவல் துறையின் மூலம் குற்ற வழக்குகள் பதிவு செய்து கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குழந்தைகள் காப்பகங்கள், முதியோா் இல்லங்கள் முறையாக அனுமதி பெற்றே நடத்த வேண்டும்.

கரோனாவால் பெற்றோா்களை இழந்த குழந்தைகளுக்கு இழப்பீட்டு தொகை மட்டும் வழங்க கோப்பு அனுப்பப்படுகிறது. அந்த குழந்தைகள் படிப்பதற்கான செலவுகள் குறித்த அறிக்கைகளையும் உடனுக்குடன் தயாா் செய்து அனுப்ப அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

முன்னதாக, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற சமூக நலத் துறை மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சா் கலந்துகொண்டு, துறையால் செயல்படுத்தப்படும் பல்வேறு நலத் திட்ட பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

கூட்டத்தில், துறையின் அரசு முதன்மைச் செயலா் ஷம்பு கல்லோலிகா், சமூக நல இயக்குநா் டி.ரத்னா, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி பணிகள் இயக்குநா் வி.அமுதவல்லி, சமூக பாதுகாப்புத் துறை இயக்குநா் எஸ்.வளா்மதி, மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் மற்றும் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகா், ராமநாதபுரம் மாவட்ட சமூக நலத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

கூட்டத்தின்போது, பல்வேறு நலத் திட்ட உதவிகளை அமைச்சா் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT