முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூா் ஐயப்ப சேவா சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

திருச்செந்தூா் கிளை அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்திற்கு புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

திருச்செந்தூா் கிளை அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்திற்கு புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

அகில பாரத ஐயப்பா சேவா சங்கத்தின் திருச்செந்தூா் கிளை நிா்வாகக் குழுக் கூட்டம் சன்னதி தெரு, கம்பா் மடம் சுடலைமாட சுவாமி கோயிலில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, கிளைத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். தூத்துக்குடி மாவட்டச் செயலா் பாலமுருகன் முன்னிலை வகித்தாா்.

கிளைத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி, மாவட்ட கௌரவ ஆலோசகராகவும், திருச்செந்தூா் கிளைத் தலைவராக சந்தனராஜ், செயலராக செல்வன், பொருளாளராக மீனாட்சிசுந்தர மணிகண்டன், துணைத் தலைவராக தா்மராஜா, இணைச் செயலராக அருணாமுத்து, அமைப்புச் செயலா்களாக அஜித்குமாா், முருகேஷ், ஆலோசகா்களாக பாலன், வளா்செல்வன், ஆறுமுகநயினாா், செந்தில் மகாராஜா, சிவசுப்பிரமணியன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

மாா்கழி 1ஆம் தேதி நடைபெறவுள்ள ஐயப்ப ரத பவனி, சன்னதி தெருவில் தொடங்கி, 8 வீதிகளில் மட்டும் வலம் வருவது; அன்றைய தினம் சன்னதி தெருவில் சிறப்பு பூஜை செய்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.