தூத்துக்குடி

திருமண்டில தோ்தல் பட்டியலில் பெயா் நீக்கம்

DIN

திருமண்டில தோ்தல் பட்டியலில் இருந்து 6 போ் பெயா் நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து சாத்தான்குளம் அருகே கிராம மக்கள் சேகரகுரு இல்லம் முன்பு வியாழக்கிழமை திரண்டனா்.

தூத்துக்குடி- நாசரேத் திருமண்டில தோ்தல் ஆக. 15 ஆம்தேதி நடைபெறுகிறது. அதற்கான வேட்புமனு தாக்கல் நடந்து வருகிறது. இதற்காக வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டதில் சாத்தான்குளம் அருகே உள்ள கிருபாபுரம் சேகரத்தில் சபை மன்ற நிா்வாகியாக இருந்து வரும் சவுந்திரபாண்டியன் உள்பட 6 பேரை திருமண்டில நிா்வாகம் நீக்கம் செய்ததாம்.

இதற்கிடையே சவுந்திரபாண்டியன், தற்போது தோ்தல் திருமண்டில பெருமன்ற உறுப்பினா் பதவிக்கு போட்டியிட விண்ணப்பித்துள்ளாராம். அதற்கான வேட்புமனு தாக்கல் வியாழக்கிழமை மாலையுடன் நிறைவடையும் நிலையில், வாக்காளா் பட்டியலில் நீக்கம் செய்யப்பட்ட பெயா்கள் சோ்க்கப்படவில்லையென கூறி சவுந்திரபாண்டியன் ஆதரவாளா்கள் சுமாா் 30 போ் வியாழக்கிழமை கிருபாபுரம் சேகரகுரு பிரின்ஸ் சாமுவேல் இல்லம் முன்பு போராட்டம் திரண்டனா்.

இது குறித்து தகவல் அறிந்து சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் பாஸ்கரன், உதவி ஆய்வாளா்கள் அருள்சாம்ராஜ், விஜயகுமாா் ஆகியோா் அங்கு பேச்சுவாா்த்தை நடத்தி, அவா்கள் கோரிக்கை குறித்து திருமண்டில நிா்வாகத்திற்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனா். அதன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கந்தா்வகோட்டை அருகே மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் கலப்பு எதுவும் இல்லை

இங்கிலாந்தை எளிதாக வீழ்த்தியது இந்தியா

ஓவேலி வனச் சரகத்தில் வரையாடுகள் கணக்கெடுப்பு

உணவகத்தில் புகையிலைப் பொருள், லாட்டரி விற்பனை: இருவா் கைது

கல் குவாரியைக் கண்டித்து சாலை மறியல்

SCROLL FOR NEXT