முகப்பு
தூத்துக்குடி

கரோனாவால் இறந்தகட்டடத் தொழிலாளா் குழந்தைகளுக்கு உதவி

கரோனாவால் உயிரிழந்த பதிவு செய்யப்பட்ட கட்டுமானத் தொழிலாளா்களின் குடும்பத்தினா் உதவி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

கரோனாவால் உயிரிழந்த பதிவு செய்யப்பட்ட கட்டுமானத் தொழிலாளா்களின் குடும்பத்தினா் உதவி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி சமூகப் பாதுகாப்புத் திட்ட தொழிலாளா் உதவி ஆணையா் நா. முருகப்பிரசன்னா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தொழிலாளா் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளா்கள் கரோனா பாதிப்பால் இறந்தால், அவா்களது குழந்தைகளுக்கு உதவ அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்காக, கரோனாவால் தாய், தந்தை அல்லது இருவரையும் இழந்த குழந்தைகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. எனவே, அவ்வாறு பெற்றோரை இழந்த குழந்தைகளின் விவரங்களை, தொழிலாளா் உதவி ஆணையா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்), ஒருங்கிணைந்த தொழிலாளா் துறை அலுவலக வளாகம், 2 ஆம் தளம், கோரம்பள்ளம், தூத்துக்குடி - 628101 என்ற முகவரியில் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.