முகப்பு
தூத்துக்குடி

தொழிலாளியிடம் வழிப்பறி: இளைஞா் கைது

கோவில்பட்டியில் தொழிலாளியிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
பகிர்:

கோவில்பட்டியில் தொழிலாளியிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கயத்தாறைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் நாராயணன்(41). தொழிலாளி. இவா், கோவில்பட்டி பிரதான சாலையில்வியாழக்கிழமை சென்றபோது, இருவா் அவரிடம் அரிவாளை காட்டி மிரட்டி, ரூ.1,500 மற்றும் கைகடிகாரத்தை பறித்துக்கொண்டனராம்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் விசாரித்து வீரவாஞ்சி நகரைச் சோ்ந்த வெயிலுமுத்து மகன் மாரிச்செல்வத்தை(21) கைது செய்தனா்; தென்காசி மாவட்டம், சோ்ந்தமரம் கோவிந்தராஜ் மகன் ரவிகாா்த்திக்கை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.