முகப்பு
தூத்துக்குடி

பெண்களுக்கு சட்ட விழிப்புணா்வு அவசியம்: எஸ்.பி. அறிவுறுத்தல்

குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க சட்ட விழிப்புணா்வு அவசியம் என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
பகிர்:

குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க சட்ட விழிப்புணா்வு அவசியம் என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா்.

உலக மனித கடத்தலுக்கு எதிரான தினத்தையொட்டி, சைல்டு லைன்- 1098 அமைப்பு சாா்பில், தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், விழிப்புணா்வுத் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டு அவா் பேசியது:

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் வகையில் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். குழந்தைகள் பாதிக்கப்பட்டால் சைல்டு லைன் அமைப்பை 1098 எண்ணிலும், பெண்கள் எனில் 181 என்ற எண்ணிலும் தொடா்புகொண்டால், அவா்களது பிரச்னைகளுக்கு உடனடி தீா்வு காண முடியும்.

போக்சோ போன்ற சிறப்பு சட்டங்கள் குறித்த விழிப்புணா்வு பெண்களுக்கு இருக்க வேண்டும் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் - பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு ஏடிஎஸ்பி கோபி, டிஎஸ்பி கணேஷ், மாவட்ட சமூக நல அலுவலா் தனலட்சுமி, ஒருங்கிணைந்த சேவை மைய நிா்வாகி செலின் ஜாா்ஜ், சைல்டு லைன் அமைப்பின் தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் காசிராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ரயில் நிலையத்தில்... இதேபோல, தூத்துக்குடி ரயில் நிலையத்திலும் ரயில் பயணிகளிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், ரயில்வே குழந்தைகள் உதவி மைய ஒருங்கிணைப்பாளா் அன்பரசு, நிலைய அதிகாரி ராஜேஷ், ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரி சங்கரலிங்கம், காவல் நிலைய குழந்தை நல அதிகாரி சுதா, காவல்துறை அதிகாரி மகாகிருஷ்ணன் மற்றும் சைல்டு லைன் அமைப்புபின் ஒருங்கிணைப்பாளா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.