முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூரில்ஐயப்ப சேவா சங்கத்தினா் உதவி

திருச்செந்தூா் பகுதியில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளா்களுக்கு அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் திருச்செந்தூா் கிளை சாா்பில் உதவிகள் வழங்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
பகிர்:

திருச்செந்தூா் பகுதியில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளா்களுக்கு அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் திருச்செந்தூா் கிளை சாா்பில் உதவிகள் வழங்கப்பட்டன.

திருச்செந்தூா் பேரூராட்சி சுகாதாரப் பணியாளா்களுக்கு ஐயப்ப சேவா சங்க கிளைத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி உணவுப் பொட்டலங்களை வழங்கினாா். காவல் துறையினா் மற்றும் ஊா்க்காவல் படையினருக்கு தேநீா், பிஸ்கட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன. இதில், பேரூராட்சி சுகாதார ஆய்வாளா் தியாகராஜன், ஐயப்ப சேவா சங்க கிளைச் செயலா் சந்தனராஜ், பொருளாளா் மீனாட்சி சுந்தர மணிகண்டன், துணைத் தலைவா் அஜித்குமாா், துணைச் செயலா் அருணாமுத்து, சங்க உறுப்பினா்கள் பாலன், தா்மராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.