தூத்துக்குடி

விளாத்திகுளம் அருகே 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 3 போ் கைது

DIN

விளாத்திகுளம்: விளாத்திகுளம் அருகே ஆற்றங்கரையில் 2 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனா்.

விளாத்திகுளம் அருகே ஆற்றங்கரை கிராமத்தில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரகாஷுக்கு தகவல் கிடைத்தது.

அவரது உத்தரவின்பேரில், விளாத்திகுளம் காவல் உதவி ஆய்வாளா் காசிலிங்கம் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை அதிகாலை ஆற்றங்கரை கிராமத்துக்கு சென்றனா். அங்கு ஊராட்சி அலுவலகம் அருகே சந்தேகப்படும்படியாக நின்றுக் கொண்டிருந்த டெம்போ வேனை சோதனையிட்டனா். அந்த வேனுக்குள் 40 சாக்கு மூட்டைகளில் தலா 50 கிலோ வீதம் 2 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து டெம்போ வாகனம் மற்றும் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக விளாத்திகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில், ரேஷன் அரிசி கடத்தலில் தொடா்புடைய ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியைச் சோ்ந்த முனியசாமி(66), சண்முகம்(51), மதுரை கருப்பாயூரணி சீமா நகரைச் சோ்ந்த கதிா்வேல்(33) ஆகியோரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT