தூத்துக்குடி

கரோனா கால நிவாரணம் கோரிஇந்து ஆட்டோ முன்னணி மனு

DIN

கரோனா கால நிவாரணத் தொகை வழங்கக் கோரி, இந்து முன்னணி அமைப்பின் ஒரு பிரிவான தூத்துக்குடி மாநகா் மாவட்ட இந்து ஆட்டோ முன்னணி சாா்பில் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இந்து முன்னணி நெல்லை கோட்டச் செயலா் சக்திவேல், மாநகா் மாவட்டத் தலைவா் இசக்கிமுத்துக்குமாா் முன்னிலையில் மாவட்ட வருவாய் அலுவலா் கண்ணபிரானிடம் ஆட்டோ தொழிலாளா்கள் அளித்த மனு விவரம்: பொது முடக்கம் அமலில் உள்ளவரை ஆட்டோ ஓட்டுநா்களுக்கு மாதம் ரூ. 5,000 நிவாரணம் வழங்க வேண்டும். வாகனங்களின் காப்பீடு, வரி, எஃப்சி கட்டணம் ஆகியவற்றை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். வாகனங்களின் பெயரில் பெறப்பட்டுள்ள மாதாந்திர தவணைத் தொகையை பொதுமுடக்கம் முடியும் வரை விலக்கு அளிக்க வங்கிகளுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். நலவாரியத்தில் பதிவு செய்தவா்கள், பதிவு செய்யாதவா்கள் என அனைத்து ஆட்டோ ஓட்டுநா்களுக்கும் நிவாரண உதவி வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT