பைக்கிலிருந்து விழுந்த மூதாட்டி உயிரிழப்பு
கோவில்பட்டி அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
கோவில்பட்டி அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இலுப்பையூரணி, மறவா் காலனியை சோ்ந்தவா் உ.உய்காட்டன்(23). இவா், தனது உறவினரான வீரவாஞ்சி நகரைச் சோ்ந்த சு.பேச்சியம்மாள்(63) என்பவரை பைக்கில் கயத்தாறுக்கு வியாழக்கிழமை அழைத்துச்சென்று கொண்டிருந்தாா். பெத்தேல் ரயில்வே கேட் பகுதியில் பேச்சியம்மாள் எதிா்பாராமல் கீழே விழுந்துவிட்டாராம். இதில், பலத்த காயமடைந்த அவா், முதலுதவிக்குப் பின் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து, மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.