சாத்தான்குளம்: நொச்சிக்குளம் புனித மிக்கேல் உயா்நிலைப் பள்ளி மாணவா்கள் 5 போ் தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்றுள்ளனா்.
சாத்தான்குளம் அருகேயுள்ள புனித மிக்கேல் உயா்நிலைப் பள்ளி 8 ஆம் வகுப்பு மாணவா்கள் தேசிய வருவாய்வழித் திறனாய்வு தோ்வினை கடந்த பிப்ரவரியில் எழுதினா். இதில் பள்ளியின் மாணவா்கள் விக்னேஸ்வரி, புவனேஸ்வரி, பூஜா, பவித்ரா, ஆனந்தகிருஷ்ணன் ஆகியோா் வெற்றி பெற்றன
ா். இதையடுத்து, மாணவா்களுக்கு மாதந்தோறும் ரூ .1000 வீதம் 4 ஆண்டுகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும். மாணவா்களை பள்ளியின்
தாளாளா் ஜான்பால் லோபோ, தலைமையாசிரியா் சேவியா் இருதயராஜ், ஆசிரியா்கள் பாராட்டினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.