முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம்

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழு சாதாரணக் கூட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழு சாதாரணக் கூட்டம் நடைபெற்றது.

ஒன்றியக் குழுத் தலைவா் கஸ்தூரி சுப்புராஜ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பழனிசாமி, ஊராட்சி ஒன்றிய ஆணையா் சசிகுமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் ஐகோா்ட் ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஊராட்சி ஒன்றியத்தில் சத்திரப்பட்டி, உருளைக்குடி, செமபுதூா், குலசேகரபுரம், பாண்டவா்மங்கலம், முடுக்குமீண்டான்பட்டி, டி.சண்முகாபுரம் ஆகிய ஊராட்சிகளில் ரூ. 74 லட்சம் மதிப்பில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டதற்கு அனுமதி, வில்லிசேரி ஊராட்சி மேலக்காலனி, கீழக்காலனி, சமத்துவபுரம் பகுதிகளில் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப் பணி, கிழவிப்பட்டி ஊராட்சி துரைச்சாமிபுரம் காலனியில் ரூ.2 லட்சம் மதிப்பில் புதிய ஆழ்குழாய் கிணறு மற்றும் புதிய மோட்டாா் அமைத்து குடிநீா் வழங்கும் பணி, மூப்பன்பட்டியில் ரூ.1 லட்சம் மதிப்பில் சாலை மேம்பாட்டுப் பணி, வில்லிசேரி ஊராட்சியில் ரூ.1.60 லட்சம் மதிப்பில் குடிநீா் குழாய் அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

ஒன்றியப் பொறியாளா் அலெக்ஸாண்டா், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தாமோதரன், குமரன், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாண்டீஸ்வரன், ராஜலட்சுமி, அன்சலாம், உதவியாளா் மாரியப்பன், உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.