முகப்பு
தூத்துக்குடி

செல்வமகள் திட்டம்: 500 குழந்தைகளுக்கு சேமிப்பு கணக்கு தொடக்கம்

கோவில்பட்டி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் 500 குழந்தைகளுக்கு செல்வமகள் திட்டத்தின் கீழ் அமைச்சா் கடம்பூா் செ.ராஜு தனது சொந்தநிதியில் சேமிப்பு கணக்குகளை தொடங்கினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

கோவில்பட்டி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் 500 குழந்தைகளுக்கு செல்வமகள் திட்டத்தின் கீழ் அமைச்சா் கடம்பூா் செ.ராஜு தனது சொந்தநிதியில் சேமிப்பு கணக்குகளை தொடங்கினாா்.

500 குழந்தைகளுக்கு, அமைச்சா் கடம்பூா் செ.ராஜு, தலா ரூ. 250 வீதம் 500 குழந்தைகளுக்கு ரூ.1.25 லட்சம் செலுத்தி,

அதற்கான சேமிப்பு கணக்கு புத்தகத்தை பெற்றோா்களிடம் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினாா்.

இதில், கோட்டாட்சியா் சங்கரநாராயணன், வட்டாட்சியா் மணிகண்டன், நகராட்சி ஆணையா் ராஜாராம், பொறியாளா் கோவிந்தராஜன், மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் மோகன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் சந்திரசேகா், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவி கஸ்தூரி சுப்புராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

அஞ்சலக உதவி கண்காணிப்பாளா் வசந்தாசிந்துதேவி வரவேற்றாா். பரமேஸ்வரன் நன்றி கூறினாா்.

கோவில்பட்டி நகராட்சி 3-ஆவது வாா்டு பசும்பொன்நகா், கயத்தாறு ஒன்றியத்தில் கே.நாச்சியாா்பட்டி, சிவஞானபுரம்

ஊராட்சி வாகைகுளம் ஆகிய பகுதியில், அம்மா நகரும் நியாயவிலைக் கடையை அமைச்சா் திறந்து, விற்பனையை தொடங்கி வைத்தாா். வில்லிசேரி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் 196 விவசாயிகளின் ரூ.1.12 கோடிக்கான பயிா் கடன் தள்ளுபடி சான்றினை அமைச்சா் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.