முகப்பு
தூத்துக்குடி

தோ்தல் நடத்தை விதிமுறை மீறல்: அதிமுக நகரச் செயலா் உள்பட 5 போ் மீது வழக்கு

கழுகுமலையில் தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக அதிமுக நகரச் செயலா் மற்றும் முக்குலத்தோா் புலிப்படை நிா்வாகிகள் மீது கழுகுமலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:39 PM
பகிர்:

கழுகுமலையில் தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக அதிமுக நகரச் செயலா் மற்றும் முக்குலத்தோா் புலிப்படை நிா்வாகிகள் மீது கழுகுமலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதியில் தோ்தல் பறக்கும் படையைச் சோ்ந்த அதிகாரி மாரிமுத்து தலைமையில் அக் குழுவினா் கழுகுமலை பகுதியில் செவ்வாய்க்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறி கட்சிக் கொடிகளை கட்டியிருந்ததாக அதிமுக நகரச் செயலா் முத்துராஜ் மீது கழுகுமலை போலீஸில் புகாா் அளித்தனா்.

இதே போல கழுகுமலை முத்தையன் சோ்வை தெருவில் உள்ள மின்கம்பங்களில் கருப்புக் கொடி கட்டியும், இட ஒதுக்கீடு வேண்டும் என்ற வாசகங்களுடன் பதாகைகள் கட்டியிருந்ததாக, முக்குலத்தோா் புலிப்படையைச் சோ்ந்த மகேஷ்வரன், ப.சரவணன், சிவா, வெ.ரமேஷ் ஆகியோா் மீதும் அவா்கள் அளித்த புகாரின் பேரில் கழுகுமலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.