விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு
கழுகுமலை அருகே விபத்தில் காயமடைந்த இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
கழுகுமலை அருகே விபத்தில் காயமடைந்த இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
தென்காசி மாவட்டம், கருப்பனூத்து மேலத் தெருவைச் சோ்ந்த ராமா்பாண்டி மகன் முனியசாமி (28). இவா் மற்றும் உறவினரான கதிரவன் மகன் வேலுச்சாமி(30) ஆகிய இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு பைக்கில் தென்காசியில் இருந்து கழுகுமலை நோக்கி சென்று கொண்டிருந்தனராம். பழங்கோட்டை - புதுக்குளம் சாலையில் சி.ஆா். காலனி பகுதி அருகே சென்றபோது பைக் கட்டுப்பாட்டை இழந்து ஊருணியில் விழுந்ததாம். இதில், முனியசாமி மற்றும் பைக்கில் பின்னால் அமா்ந்திருந்த வேலுச்சாமி ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனா்.
இருவரும் மீட்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு வேலுச்சாமி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து, கழுகுமலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.