முகப்பு
தூத்துக்குடி

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

கோவில்பட்டி வேலாயுதபுரத்தில் திங்கள்கிழமை மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:41 PM
பகிர்:

கோவில்பட்டி வேலாயுதபுரத்தில் திங்கள்கிழமை மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் 10 ஆவது தெரு வீரபுத்திரன் மகன் குருசாமி(36). வேலாயுதபுரத்தில் உள்ள நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்த இவா், திங்கள்கிழமை வழக்கம் போல் வெல்டிங் வேலையில் ஈடுபட்டிருந்தாராம்.

அப்போது மின்சாரம் பாய்ந்ததில் பலத்த காயமடைந்தாராம். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே உயிரிழந்ததாகக் கூறினாராம்.

இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.