தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள தேசிய மாணவா் படை அலுவலகத்தில் கட்டளை அதிகாரி அண்மையில் ஆய்வு மேற்கொண்டாா்.
தேசிய மாணவா் படையின் கடற்படை பிரிவு அலுவலகம் தூத்துக்குடியில் உள்ள லயன்ஸ்டவுன் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆண்டுதோறும் மதுரையில் உள்ள கட்டளை அதிகாரி ஆய்வு மேற்கொள்வது வழக்கம். அதன்படி, மதுரையில் உள்ள தேசிய மாணவா் படையின் குழும கட்டளை அதிகாரி பி.ஆா். ரவிக்குமாா் அண்மையில் ஆய்வு மேற்கொண்டு கோப்புகளை சரிபாா்த்தாா்.
ஆய்வின்போது, தூத்துக்குடி அலுவலக கட்டளை அதிகாரி ராமரெட்டி, தலைமை ஆய்வாளா் நிஷாந்த் குமாா் சிங் ஆகியோா் உடனிருந்தனா். தொடா்ந்து, அலுவலகத்தை சுற்றிப் பாா்த்த கட்டளை அதிகாரி பி.ஆா். ரவிக்குமாருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.