முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே விபத்து: தொழிலாளி பலி

கோவில்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
பகிர்:

கோவில்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

கோவில்பட்டியையடுத்த கரிசல்குளம் வடக்குத் தெரு மூக்கையா மகன் கூலித் தொழிலாளி செண்பகராஜ்(42). இவா் ஓட்டிச் சென்ற பைக்கும், செண்பகப்பேரி பிள்ளையாா் கோயில் தெரு பொன்னுச்சாமி மகன் மாரியப்பன்(42) ஓட்டிச் சென்ற பைக்கும் பசுவந்தனை சாலையில் நேருக்கு நோ் மோதியதாம். இதில், னா். காயமடைந்த இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். செண்பகராஜ் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். ஆனால், அவா் செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதையடுத்து அவரது சடலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.