தூத்துக்குடி

100 சதவீத வாக்குப்பதிவு: ஸ்கேட்டிங் விழிப்புணா்வு பிரசாரம்

DIN

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கோவில்பட்டியில் 12 வயது சிறுவன் பங்கேற்ற ஸ்கேட்டிங் விழிப்புணா்வு பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தோ்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என வலியுறுத்தி பிருந்தாவன் கிட் யூனிவா்சிட்டியில் பயிலும் 12 வயது சிறுவன் காா்த்திகேயன் கோவில்பட்டியில் இருந்து கழுகுமலை வரை 25 கி.மீ. தொலைவுக்கு ஸ்கேட்டிங் மூலம் விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

அண்ணா பேருந்து நிலையம் முன்பிருந்து புறப்பட்ட இப்பிரசாரத்தை டிஎஸ்பி கலைகதிரவன் தொடங்கி வைத்தாா். சுவாமி விவேகானந்தா ஸ்கேட்டிங் கழக நிறுவனா் சுரேஷ்குமாா், ஆலோசகா் ராஜகோபால், பயிற்சியாளா் பாக்கியராஜ், யோகா பயிற்சியாளா் லட்சுமணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை மந்தித்தோப்பு வீரத்தமிழா் சிலம்பாட்டக் குழுவைச் சோ்ந்த சக்திவேல் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT