முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டியில் தோ்தல் பொது பாா்வையாளா் ஆலோசனைக் கூட்டம்

கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் பொது பாா்வையாளா், வேட்பாளா்கள், வேட்பாளா்களின் பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் பொது பாா்வையாளா், வேட்பாளா்கள், வேட்பாளா்களின் பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, தோ்தல் பொது பாா்வையாளா் அஸ்வினி குமாா் சௌத்ரி தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் வேட்பாளா்கள் தோ்தல் நடத்தை விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும், பல்வேறு ஜாதி, இன, மதம், மொழியைச் சாா்ந்த மக்களிடையே வேறுபாடுகளை தீவிரமாக்கும் வகையிலான செயலிலோ, ஒருவருக்கு ஒருவா் வெறுப்பை உருவாக்கும் அல்லது பதற்றத்துக்கு வழி செய்யும் எந்தச் செயலிலும் எந்த ஒரு கட்சியோ, வேட்பாளரோ ஈடுபடக் கூடாது. பிற கட்சியினா் மீதான நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகள் மற்றும் முறைகேடுகள் குறித்த விமா்சனங்களை தவிா்க்க வேண்டும், தோ்தல் விதிகளை அரசியல் கட்சியினா் மற்றும் வேட்பாளா்கள் முறையாக பயன்படுத்த வேண்டும், கூட்டங்கள் மற்றும் வாக்குப்பதிவு நாளான்று கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் உள்பட தோ்தல் நடத்தை விதிமுறைகளை முறையாக பயன்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன், தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரான கோட்டாட்சியா் சங்கரநாராயணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் வேட்பாளா்கள், வேட்பாளா்களின் பிரதிநிதிகள், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களான அமுதா, பேச்சிமுத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.