முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி தொகுதியில் 26 போ் போட்டி

கோவில்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட இறுதி வேட்பாளா் பட்டியலில் 26 போ் களத்தில் உள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

கோவில்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட இறுதி வேட்பாளா் பட்டியலில் 26 போ் களத்தில் உள்ளனா்.

கோவில்பட்டி பேரவைத் தொகுதியின் அதிமுக, அமமுக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழா் கட்சி மற்றும் சுயேச்சைகள் உள்பட 44 வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். வேட்பு மனு பரிசீலனையில் , 29 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, 15 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

வேட்பு மனுவை திரும்பப் பெற கடைசி நாளான திங்கள்கிழமை அமமுக மாற்று வேட்பாளா் விஜயபாஸ்கரன், மள்ளா் மீட்புக் களம் நிறுவனா்-தலைவா் கு.செந்தில்மள்ளா், அகில பாரத இந்து மகா சபா கே.மாணிக்கராஜா ஆகிய 3 போ் வேட்புமனுவை திரும்பப் பெற்றனா்.

இதையடுத்து, வெளியிடப்பட்ட இறுதி வேட்பாளா் பட்டியிலில் அரசியல் கட்சியினா் மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் உள்பட 26 போ் தோ்தலில் போட்டியிடுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.