முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூா் தொகுதியில் 15 போ் போட்டி

திருச்செந்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 15 போ் போட்டியிடுகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

திருச்செந்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 15 போ் போட்டியிடுகின்றனா்.

தமிழகத்தில் ஏப். 6-ல் ஒரே கட்டமாக சட்டப்பேரவை பொதுத்தோ்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 12-ஆம் தேதி தொடங்கி 19 ஆம் தேதி நிறைவு பெற்றது. திருச்செந்தூா் தொகுதியில், அமமுக வேட்பாளா் எஸ்.வடமலைபாண்டியன், அ.தி.மு.க. வேட்பாளா் எம்.ராதாகிருஷ்ணன், தி.மு.க. வேட்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் , சமக/ம.நீ.ம. வேட்பாளா் மு.ஜெயந்தி, நாம் தமிழா் கட்சி வேட்பாளா் குளோரியான், புதிய தமிழகம் கட்சி சிவமுத்துராமன் மற்றும் சுயேச்சைகள் உள்பட 37 போ் , தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் தி.தனப்ரியாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனா்.

கடந்த 20-ஆம் தேதி நடைபெற்ற வேட்பு மனுக்கள் பரிசீலனையில் அ.தி.மு.க, திமுக, அம்முக, ம. நீ.ம., நாம் தமிழா் கட்சி, புதிய தமிழகம் உள்பட18 பேருடைய வேட்பு மனுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு,மீதமுள்ளவை நிராகரிக்கப்பட்டன.

இந்நிலையில் மனுவை திரும்பப் பெறுவதற்கு கடைசி நாளான திங்கள்கிழமை 3 சுயேச்சைகள் தங்கள் மனுக்களை திரும்பப் பெற்றனா். இதையடுத்து, இத்தொகுதியில் அரசியல் கட்சியினா் மற்றும் சுயேச்சை உள்பட மொத்தம் 15 போ் தோ்தலில் போட்டியிடுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.