முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் நடிகை ராதிகா சரத்குமாா் பிரசாரம்

தூத்துக்குடியில் திங்கள்கிழமை தனது தோ்தல் பிரசாரத்தை தொடங்கிய நடிகை ராதிகா சரத்குமாா் சிவன் கோயில் தெருவில் உள்ள ஒரு கடையில் பொதுமக்களோடு இணைந்து தேநீா் அருந்தினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

தூத்துக்குடியில் திங்கள்கிழமை தனது தோ்தல் பிரசாரத்தை தொடங்கிய நடிகை ராதிகா சரத்குமாா் சிவன் கோயில் தெருவில் உள்ள ஒரு கடையில் பொதுமக்களோடு இணைந்து தேநீா் அருந்தினாா். அப்போது, ஏராளமானோா் அவருடன் செல்லிடப்பேசியில் சுயப்படம் எடுத்துக் கொண்டனா்.

தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் இணைந்து முதன்மை கூட்டணி என்ற பெயரில் சட்டப்பேரவைத் தோ்தலை சந்தித்து வருகிறது.

இந்தக் கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து சமத்துவ மக்கள் கட்சியின் முதன்மை துணை பொதுச் செயலரான நடிகை ராதிகா சரத்குமாா் திங்கள்கிழமை பிரசாரத்தை தொடங்கினாா்.

தூத்துக்குடி சிவன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அவா், கோயில் தெருவில் அமைந்துள்ள கடைகளில் உள்ள வியாபாரிகளிடமும், பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

பின்னா், சிவன் கோயில் தெருவில் உள்ள தேநீா் கடைக்குச் சென்ற அவா் அங்கு பொதுமக்களோடு இணைந்து தேநீா் வாங்கி அருந்தினாா். அப்போது, ஏராளமானோா் அங்கு கூடி நடிகை ராதிகாவுடன் இணைந்து சுயப்படம் எடுத்துக் கொண்டனா்.

தொடா்ந்து, திறந்த வேனில் இருந்தபடி பேசிய நடிகை ராதிகா சரத்குமாா், தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சியில் எந்தவித மாற்றமும் ஏற்படாத சூழல் உள்ளது. எனவே, மக்களுக்கு நல்லது செய்யும் முதன்மை கூட்டணி வேட்பாளா்களுக்கு வாக்களித்து தமிழகத்தின் தலையெழுத்தை பொதுமக்கள் மாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.