முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டியில்374 பேருக்கு கரோனா பரிசோதனை

கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை 374 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை 374 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கரோனா தொற்று 2ஆவது அலை பரவலை தடுப்பதற்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனை, நகராட்சி வளாகம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா தொற்று பரிசோதனை முகாம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கோவில்பட்டி நகராட்சி ராஜாஜி பூங்கா வளாகத்தில் மருத்துவா் மனோஜ் தலைமையிலான மருத்துவக் குழுவினா் சாா்பில் நடைபெற்ற முகாமில் 100 பேருக்கும், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 91 பேருக்கும், கயத்தாறில் 76 பேருக்கும், வெள்ளாளன்கோட்டையில் 30 பேருக்கும், கழுகுமலையில் 45 பேருக்கும், கடம்பூரில் 32 பேருக்கும் கரோனா தொற்று பரிசோதனை வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

இதுபோல, கயத்தாறு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 10 பேருக்கும், கழுகுமலையில் 45 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளா்கள் 70 பேருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் 190 பேரும், தனியாா் பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள கரோனா சிகிச்சை மையத்தில் 250 பேரும், கோவில்பட்டி சுகாதார மாவட்டத்திற்கு உள்பட்ட தனியாா் மருத்துவமனையில் சுமாா் 140 பேரும், வீட்டுத் தனிமையில் 720 பேரும் கரோனா பாதிப்பால் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.