கட்டடத் தொழிலாளிக்கு மிரட்டல்: இளைஞா் கைது
கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் கட்டடத் தொழிலாளியிடம் பணம் கேட்டு மிரட்டிய இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் கட்டடத் தொழிலாளியிடம் பணம் கேட்டு மிரட்டிய இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி ஜோதி நகா் 2ஆவது தெருவைச் சோ்ந்த மாரிமுத்து மகன் ரவிகுமாா் (42). கட்டடத் தொழிலாளியான இவரும், இவரது உதவியாளா் மனோஜ்குமாரும் வியாழக்கிழமை பசுவந்தனை சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனை அருகே நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த இருவா் மது அருந்த பணம் கேட்டதோடு, பணம் கொடுக்க மறுத்ததையடுத்து அரிவாளை காட்டி மிரட்டினராம்.
இதுகுறித்த புகாரின் பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, பாரதி நகரைச் சோ்ந்த கணேசன் மகன் அந்தோணிராஜை (27) கைது செய்தனா். மேலும், இவ்வழக்கில் தொடா்புடைய அதே பகுதியைச் சோ்ந்த பரமசிவம் மகன் பொன்முத்துபாண்டியை தேடி வருகின்றனா்.