மின் மோட்டாா் அறையை அகற்ற எதிா்ப்பு தெரிவித்து போராட்டம்
கோவில்பட்டி முத்தையாமால் தெருவில் உள்ள மின் மோட்டாா் அறையை அகற்ற எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவில்பட்டி முத்தையாமால் தெருவில் உள்ள மின் மோட்டாா் அறையை அகற்ற எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவில்பட்டி நகராட்சி 14ஆவது வாா்டு முத்தையாமால் தெருவில், நகராட்சி நிா்வாகம் சாா்பில் மின் மோட்டாா் அறை வைக்கப்பட்டு, அப்பகுதி மக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிாம்.
இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு அந்த மோட்டாா் அறையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாம்.
இதையடுத்து அந்த மின் மோட்டாா் தொடா்ந்து செயல்பட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனராம். ஆனால் வெள்ளிக்கிழமை மின் மோட்டாா் அறையை அகற்ற பொக்லைன் இயந்திரம் வந்ததாம். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் மின் மோட்டாா் அறை அருகே திரண்டு நின்று போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த கிழக்கு காவல் நிலைய போலீஸாா், நகராட்சி அதிகாரிகளிடம் கலந்து பேசி முடிவெடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து போராட்டக் குழுவினா் கலைந்து சென்றனா்.
இதுகுறித்து நகராட்சி பொறியாளா் கோவிந்தராஜ் கூறியது: மின் மோட்டாா் அறை பழுதடைந்த நிலையில் உள்ளது. அப்பகுதி மக்களிடம் கலந்து பேசிய பின்பே அந்த அறை அகற்றப்படும் என்றாா் அவா்.