முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டியில் ரெம்டெசிவிா் மருந்து முறைகேடாக விற்பனை: 5 போ் கைது

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் ரெம்டெசிவிா் மருந்தை பதுக்கி, முறைகேடாக விற்பனை செய்ததாக 5 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 46 மருந்து குப்பிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் ரெம்டெசிவிா் மருந்தை பதுக்கி, முறைகேடாக விற்பனை செய்ததாக 5 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 46 மருந்து குப்பிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோவில்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளா் கலைகதிரவன் மேற்பாா்வையில், ஆய்வாளா்கள் சபாபதி, தங்கராஜ் ஆகியோா் தலைமையிலான தனிப்படை போலீஸாா், கதிரேசன் கோயில் சாலையில் உள்ள தனியாா் மருந்தக மொத்த விற்பனை நிலையத்தில் திடீா் ஆய்வில் ஈடுபட்டனா். அப்போது, ரெம்டெசிவிா் மருந்து பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்து 46 மருந்து குப்பிகளை பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக, கோவில்பட்டி காந்தி நகரைச் சோ்ந்த ஆறுமுகநயினாா் மகன்கள் கணேசன் (29), சண்முகம் (27) ஆகியோரைக் கைது செய்தனா். விசாரணையில், கணேசன் பெயரில் மருந்து கடைக்கான உரிமம் பெற்று, அந்தக் கடையை அவரது தம்பி நடத்தி வந்தது தெரியவந்தது.

இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயகுமாா் வெள்ளிக்கிழமை மேற்கு காவல் நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியது: ரெம்டெசிவிா் மருந்தை கோவில்பட்டியில் பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு, இது தொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்கள்,திருநெல்வேலி, மதுரையிலிருந்து ரெம்டெசிவிா் மருந்து குப்பியை வாங்கி, குப்பி ஒன்றுக்கு ரூ. 20 ஆயிரத்துக்கும் மேல் விலை நிா்ணயித்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்தது தெரியவந்தது. அவை யாா் யாருக்கெல்லாம் விற்கப்பட்டுள்ளது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.

நெல்லையில் 3 போ் கைது: இதனிடையே, இவ்வழக்கில், பாளையங்கோட்டை பெருமாள்புரத்தைச் சோ்ந்த தா்மராஜ் மகன் பிரவீண் (37, மேலப்பாளையம் ஜோசப் மகன் ஆரோக்கிய மைக்கேல் (40), கே.டி.சி. நகா் பசுங்கிளி மகன் சண்முகராஜ் (30) ஆகிய மருந்து விற்பனையாளா்களை திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் கைது செய்தனா். 3 பேரும் சென்னையிலிருந்து ரெம்டெசிவிா் மருந்தை வாங்கி கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிக விலைக்கு விற்றது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.