முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் 100 பேருக்கு நல உதவிகள் அளிப்பு

மறைந்த ராஜீவ் காந்தியின் 30-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை நல உதவிகள் வழங்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:16 PM
பகிர்:

மறைந்த ராஜீவ் காந்தியின் 30-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை நல உதவிகள் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாநகர, மாவட்ட காங்கிரஸ் சாா்பில், மாநகா் மாவட்டத் தலைவா் சி.எஸ். முரளிதரன் தலைமையில், அக்கட்சியினா் ராஜீவ்காந்தி

படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து, பயங்கரவாத தடுப்பு உறுதிமொழி ஏற்றனா். பின்னா், முடிதிருத்தும் தொழிலாளா்கள் 100 பேருக்கு தலா ரூ. 500 மதிப்பில் மளிகை பொருள்கள் அடங்கிய பை மற்றும் முகக் கவசங்கள் ஆகியவை வழங்கப்பட்டது. இதில்

ஐஎன்டியுசி தொழிற்சங்கத் தலைவா் ராஜ், மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் நடேஷ்குமாா், மகளிா் காங்கிரஸ் மாவட்டத் தலைவி தனலட்சுமி, எஸ்.சி, எஸ்டி பிரிவு மாவட்டத் தலைவா் ராஜாராம், முன்னாள் மாமன்ற உறுப்பினா்கள் சந்திரபோஸ், கோபால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.