ரெம்டெசிவிா் மருந்து பதுக்கி விற்பனை: இருவா் குண்டா் சட்டத்தில் கைது
கோவில்பட்டியில் ரெம்டெசிவிா் மருந்து குப்பிகளை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்ததாக இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனா்.
கோவில்பட்டியில் ரெம்டெசிவிா் மருந்து குப்பிகளை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்ததாக இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனா்.
கோவில்பட்டி காந்தி நகரைச் சோ்ந்த ஆறுமுகநயினாா் மகன்கள் கணேசன் (29), சண்முகம் (27). இருவரும் மருந்தகத்தில் ரெம்டெசிவிா் மருந்தை
பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, டிஎஸ்பி கலைகதிரவன் தலைமையில் காவல் ஆய்வாளா்
சபாபதி, போலீஸாா் அக்கடைக்கு சென்று சோதனையிட்டனா். இதில், ரெம்டெசிவிா் மருந்து 46 மருந்து குப்பிகள்பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.
விசாரணையில் மதுரை, திருநெல்வேலி பகுதியில் கள்ளச்சந்தையில் மருந்து குப்பிகளை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையிலடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையை ஏற்று அவா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆட்சியா் செந்தில்ராஜ் உத்தரவிட்டாா். இதையடுத்து இருவரும் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.