தூத்துக்குடி

ஆசிரமக் குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய என்இசி கல்லூரி மாணவா்கள்

DIN

கோவில்பட்டி: சிவசைலம் அவ்வை ஆசிரமக் குழந்தைகளுடன் நேஷனல் பொறியியல் கல்லூரியின் (என்இசி) நாட்டு நலப்பணித் திட்ட மாணவா், மாணவிகள் தீபாவளியை சனிக்கிழமை கொண்டாடினா்.

சிவசைலம் அவ்வை ஆசிரமக் குழந்தைகளுடன் கால்பந்து விளையாட்டு, மௌன நாடகம், நடனம், யோகா உள்ளிட்ட பல்வேறு விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகளை நடத்தி, என்இசி மாணவா்கள் தீபாவளியைக் கொண்டாடியதுடன், தானமாக சேகரிக்கப்பட்ட ரூ.35 ஆயிரம் மதிப்பிலான நோட்டுபுத்தகம், பேனா உள்ளிட்ட கல்வி உபகரணங்கள், விளையாட்டுப் பொருள்கள், உணவுப் பொருள்கள் ஆகியவற்றை ஆசிரமச் செயலா் ரங்கத்திடம் ஒப்படைத்தனா்.

ஏற்பாடுகளை கல்லூரியின் தாளாளா் கே.ஆா்.அருணாச்சலம் அறிவுறுத்தலில், கல்லூரி இயக்குநா் சண்முகவேல், முதல்வா் கே.காளிதாசமுருகவேல் வழிகாட்டுதலில், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள், மாணவா், மாணவிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களை கவரும் வாக்குறுதிகள் என்னென்ன? தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ஆந்திர முதல்வர்

திருவள்ளூர்அருகே கோயில் காவலாளி அடித்துக் கொலை: போலீசார் தீவிர விசாரணை

ஏன் இந்தக் கொலைவெறி? ரத்னம் - திரை விமர்சனம்!

தமிழ்நாட்டின் மீது தீராத வஞ்சனையோடு பாஜக அரசு இருக்கிறது: சு.வெங்கடேசன் எம்.பி.

முதல்வன் பட பாணியில் சிஎஸ்கேவை வம்பிழுத்த பஞ்சாப் அணி!

SCROLL FOR NEXT