தீபாவளிப் பண்டிகையையொட்டி கடைகள், வணிக நிறுவனங்களில் முன்பு அலங்கார விளக்குகள் பொருத்தும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்ற அறிவிப்புக்கு இந்து வியாபாரிகள் நலச்சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சங்கத்தின் மாநிலத் தலைவா் வி.பி.ஜெயக்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பண்டிகை காலங்களில் கடைகளை வண்ண அலங்கார விளக்குகளால் அலங்கரிப்பது வழக்கம். கரோனா தொற்றால் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் வியாபாரிகள் தற்போது வணிகத்தை மீட்டு வருகின்றனா். பண்டிகைக் காலத்தில் கடைகளை அலங்கரித்து வியாபாரத்தை மேம்படுத்த விரும்புவா். இந்நிலையில் மின்விளக்குகளால் அலங்கரிக்கும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என மின்வாரியம் அறிவித்திருப்பது வியாபாரிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும். ஆகவே, வியாபாரிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மின்வாரியம் இந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.