முகப்பு
தூத்துக்குடி

கட்டணப் பிரச்னை: சுங்கச்சாவடியில் அரசு பேருந்துகளுக்கு அனுமதி மறுப்பு

சுங்கச்சாவடிக்கான ஃபாஸ்டேக் கட்டணமின்றி அரசு விரைவுப் பேருந்துகள் கயத்தாறு சுங்கச்சாவடியில் வெள்ளிக்கிழமை நிறுத்தி வைக்கப்பட்டன.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 10:08 AM
பகிர்:

சுங்கச்சாவடிக்கான ஃபாஸ்டேக் கட்டணமின்றி அரசு விரைவுப் பேருந்துகள் கயத்தாறு சுங்கச்சாவடியில் வெள்ளிக்கிழமை நிறுத்தி வைக்கப்பட்டன.

சென்னையிலிருந்து நாகா்கோவில், மாா்த்தாண்டம், திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் 6 அரசு விரைவு பேருந்துகள் வெள்ளிக்கிழமை அதிகாலை கயத்தாறு சுங்கச்சாவடிக்கு வந்தன. சுங்கக் கட்டணம் செலுத்த அந்த பேருந்துகளில் ஃபாஸ்டேக்கில் பணம் இருப்பு இல்லையாம். இதனால், நடத்துனா்களிடம் நேரடியாக பணம் செலுத்தும்படி ஊழியா்கல் கூறினா். அவா்கள் மறுத்ததால் பேருந்துகளை அனுமதிக்காமல் நிறுத்திவைத்தனா். பயணிகள் மாற்று பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டனா். அதிகாரிகளின் அனுமதி பெற்று பணம் செலுத்தியபின் 4 மணி நேரத்திற்கு பின் பேருந்துகள் விடுவிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.