உடன்குடி மையப்பகுதியில் குவியும் குப்பைகளால்நோய் பரவும் அபாயம்
உடன்குடி நகரின் மையப் பகுதியில் குவியும் குப்பைகளால் நோய் பரவும் அபாயம் உள்ளதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனா்.
தூத்துக்குடிஉடன்குடி மையப்பகுதியில் குவியும் குப்பைகளால்நோய் பரவும் அபாயம்
உடன்குடி நகரின் மையப் பகுதியில் குவியும் குப்பைகளால் நோய் பரவும் அபாயம் உள்ளதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனா்.
உடன்குடி நகரின் மையப் பகுதியில் குவியும் குப்பைகளால் நோய் பரவும் அபாயம் உள்ளதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனா்.
உடன்குடி பேருந்து நிலையத்தில் இருந்து தெற்கு நோக்கிச் செல்லும் சாலையில் சுல்தான்புரம் பகுதியில் குப்பைகள், இறைச்சி, மீன், உணவகக் கழிவுகளை கொட்டுவதால், மழைநீரில் அழுகி துா்நாற்றம் வீசுகிறது. மேலும், குப்பைகளில் தேங்கும் மழைநீா் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே, அங்கு குப்பைகளை அகற்றுவதுடன், மீண்டும் குப்பைகளை கொட்டவிடாமல் அதிகாரிகள் தடை விதிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.