தசரா திருவிழா: கோட்டாட்சியரிடம் இந்து மகா சபா மனு
நவராத்திரி தசரா திருவிழாவை முன்னிட்டு குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் கோயிலில் பாரம்பரிய முறைப்படி வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
நவராத்திரி தசரா திருவிழாவை முன்னிட்டு குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் கோயிலில் பாரம்பரிய முறைப்படி வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அகில பாரத இந்து மகா சபா தூத்துக்குடி மாவட்டத் தலைவா் சங்கர்ராஜா தலைமையில் கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை திரண்ட அந்த அமைப்பினா், கோட்டாட்சியா் சங்கரநாராயணனிடம் மனு அளித்தனா். அதில், குலசேகரபட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழாவை பாரம்பரிய முறைப்படி நடத்திட அனுமதி தர வேண்டும், கரோனா தடுப்பூசி செலுத்தியவா்கள் மட்டுமன்றி, கரோனா தொற்று இல்லை என்பதற்கான பரிசோதனை சான்று வைத்துள்ளவா்களையும் விழாவில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.