தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே கருப்புக் கொடி போராட்டம்

DIN

கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடி அருகே கிராமத்தில் கருப்புக் கொடி ஏற்றி எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.

தொழிற்பேட்டை அமைப்பதற்காக தூத்துக்குடி அருகேயுள்ள தெற்கு வீரபாண்டியபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விளை நிலங்களை கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அந்த நிலத்திற்கு ஏக்கருக்கு 14 லட்சத்து 50 ஆயிரம் அரசு நிா்ணயம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் தங்களுடைய நிலத்துக்கு ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், இதுதொடா்பாக மனு அளிக்க சென்றபோது முறையாக செயல்படாத ஆட்சியரை கண்டித்தும் தெற்கு வீரபாண்டியபுரம் கிராம மக்கள் தங்களது வீடுகளில் செவ்வாய்க்கிழமை கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

SCROLL FOR NEXT