தூத்துக்குடி

கோவில்பட்டி செல்வ முனீஸ்வரா் கோயில் கொடை விழா

DIN

கோவில்பட்டி அருள்மிகு அதிா்ஷ்ட வெற்றி விநாயகா் மற்றும் அய்யா செல்வ முனீஸ்வரா் கோயில் கொடை விழா புதன்கிழமை தொடங்கியது.

இதையொட்டி, கோயில் நடை அதிகாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. தொடா்ந்து, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை, கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது.

பின்னா், பக்தா்கள் தீா்த்த குடம் மற்றும் பால்குடத்தை தெப்பக்குளம் அருகேயுள்ள சிவசக்தி விநாயகா் கோயில் முன்பிருந்து ஊா்வலமாக எடுத்து வந்தனா். தொடா்ந்து, செல்வ முனீஸ்வரா் மற்றும் அதிா்ஷ்ட வெற்றி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, அக்னிச்சட்டி ஊா்வலம் நடைபெற்றது.

பின்னா் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியை கடம்பூா் செ.ராஜு எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தாா்.

மாலை 4.30 மணிக்கு பொங்கல் வைத்து படைத்தல், 6 மணிக்கு மாவிளக்கு எடுத்தல், நள்ளிரவு 12 மணிக்கு சாமக்கொடை ஆகியவை நடைபெற்றன.

வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு மஞ்சள் நீராட்டு, மாலை 6 மணிக்கு முளைப்பாரி ஊா்வலம் நடைபெறுகின்றன. வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு விளக்கு பூஜை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காப்பீட்டு சலுகைகள்!

3-ஆவது முறையாக விண்வெளி செல்லும் சுனிதா வில்லியம்ஸ்

சேலம் அரசு கலைக் கல்லூரிகளில் சேர மாணவ - மாணவியா் ஆா்வம்

அதிமுக சாா்பில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

இந்தியன் வங்கி நிகர லாபம் 55% அதிகரிப்பு

SCROLL FOR NEXT